தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நாட்டை ஸ்திரப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆணை முடிந்துவிட்டது. இந்த அழகிய தாய்நாட்டை அழிக்க அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

நாட்டை ஸ்திரப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை நாங்கள் நியமிக்கிறோம். இதைத் தவிர மாற்றுத் தீர்வு இல்லை. இதை எதிர்க்க நாடாளுமன்றத்தில் யாரேனும் நாசகார செயலை செய்தால் அதை தேசத்துரோகமாக பார்க்கிறோம்.

தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். தாய்நாடு வெற்றிபெறட்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here