மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை காலம் கடந்தும் அறுவடை செய்ய முடியாமல் இருந்த நெல்வயல் சொந்தக்காரர்களுக்கு எரிபொருள் பிரச்சி னையை தீர்க்க இன்று மட்டக்களப்பு ஐ.ஒ.சீ எரிபொருள் நிலையத்தில் மூலம் எரிபொருள் வழங்கப்பட்டது
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் நெல் வயல் எரிபொருள் இன்மையால் அறுவடை செய்யும் நாள் 20 நாளை கடந்தும் அறுவடை செய்ய முடியாமல் இருப்பதாக அப்பிரதேச விவசாயிகள் கடும் கவலை வெளியிட்டதை அடுத்து மட்டக்களப்பு ஐ.ஓ.சீ எரிபொருள் நிரப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முத்துக்குமார் செல்வராஜா கொடுத்த வாக்கு றுதிக்கு அமைய இன்று மட்டக்களப்பு ஐஓசி எரிபொருள் நிலையத்தில் இந்த அறுவடைக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கும் பணிகள் இன்று நடைபெற்றன.
இதேவேளை முடங்கிக்கிடந்த தபால் சேவைகளை விரிவு படுத்து வதற்காகவும் தபால் சேவை வாகனங்களுக்கும் மட்டக்களப்பு ஐஓசி நிறுவனத்தின் மூலம் எரிபொருள் வழங்கப்பட்டதுடன் ஏனைய அரசாங்க நிறுவனங்கள் பலவற்றுக்கும் இன்று ஐஓசி மட்டக்களப்பு நிறுவனத்தின் மூலம் எரிபொருள் வழங்கப்பட்டதாக நிறுவனத்தின் உரிமையாளர் முத்துக்குமார் செல்வராஜா தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here