இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். எரிபொருள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனினும் தற்போது எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்திய சாலைகள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளன. அந்தவகையில் தமிழர் பகுதியில் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைகளின் நிலமைகள் உள்ளன.

தமிழர் பகுதியில் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைகள்; வெளியான பதைபதைக்கும் காட்சிகள்! | Hospitals In Critical Condition In Tamil Areas

எரிபொருள் இல்லாமையால் நோயாளிகளை இடம்மாற்றுவதற்கு வாகனங்கங்களுக்கு எரிபொருள் இன்மையால் நோயாளிகள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சிவமோகன் , மாட்டு வண்டியில் நோயாளியை அழைத்துச்செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைகள்; வெளியான பதைபதைக்கும் காட்சிகள்! | Hospitals In Critical Condition In Tamil Areas

ஓட்சிசன் சிலிண்டருடன் குறித்த நோயாளியை மருத்துவர் சிவமோகன் மாட்டு வண்டியில் அழைத்து ச் செல்லும் பதைபதைக்கும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்க வைத்துள்ளது.

தமிழர் பகுதியில் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைகள்; வெளியான பதைபதைக்கும் காட்சிகள்! | Hospitals In Critical Condition In Tamil Areas

அதேவேளை இந்த இக்கட்டான கால கட்டத்திலும் அர்ப்பணிப்புடன் தனது மருத்துவ சேவையை திறம்பட செய்துள்ள மருத்துவர் சிவமோகனுக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here