மலையக பிரதேசங்களில் நெத்திலி கருவாட்டின் விலை மிகவும் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மலையக பகுதிகளில் ஒரு கிலோ கிராம் நெத்திலி கருவாடு ஆயிரத்து 700 ரூபா முதல் 2 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

சூரை கருவாடு ஒரு கிலோ கிராம் 2 ஆயிரத்து 700 ரூபா முதல் 2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மலையக பகுதிகளில் கருவாடு விலைகள் அதிகரிப்பு:ஒரு கிலோ கிராம் நெத்திலி 2000 ரூபா | Dryfish Price Increased Up Country

ஒரு கிலோ கிராம் உருளை கருவாடு 2 ஆயிரத்து 200 ரூபா முதல் 2 ஆயிரத்து 300 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்ட கருவாடு 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலைகள் காரணமாக உணவுக்காக கருவாட்டை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.

இந்த விலை அதிகரிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள வர்த்தகர்கள், டீசல் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு என்பன காரணமாக கருவாடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here