நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் நாளைய தினம் மூட வாய்ப்புள்ளதாக லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இன்றும், நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முக்கிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் நாளை மூடப்படுகிறதா..! வெளியான தகவல் | All Petrol Stations Likely To Close Tomorrow

இந்த நிலையிலேயே குறித்த விடயத்தை லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (எல்ஐஓசி) திருகோணமலையில் உள்ள பெட்ரோலிய முனையத்தையும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் நாளை (9) மூட வாய்ப்புள்ளது முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எமது முனையம் மற்றும் எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் நாளை மூடப்படுகிறதா..! வெளியான தகவல் | All Petrol Stations Likely To Close Tomorrow

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதுடன், லங்கா ஐஓசி தற்போது பொது மக்களுக்கும் எரிபொருளை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here