தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூலை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தென்னைமரத்துக்கு ஏணி வைத்து ஏறிய போது, தவறி வீழ்ந்துள்ளார்.

முதியவர் உடனடியாக மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் சிகிச்சை பயனின்றி நேற்று (புதன்கிழமை) உயிழந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here