மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று (6) புதன்கிழமை காலை முதல் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமாரின் மேற்பார்வையில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலகத்தில் எரிபொருளுக்கான அட்டை பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக வங்காலை கிழக்கு,தோமஸ்புரி,நறுவிலிக்குளம்,வஞ்சியன்குளம்,உமனகரி,அச்சங்குளம்,இராசமடு,இலந்தைமோட்டை,செட்டியார் கட்டையடம்பன் ஆகிய 9 கிராம அலுவலகர் பிரிவுகளை சேர்ந்த எரிபொருள் அட்டையை பெற்றுக்கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு இன்றைய தினம் புதன் கிழமை (6) காலை முதல் மாலை வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிறப்பும் நிலையத்தில் எரி பொருள் வழங்கப்பட்டுள்ளது.

நானாட்டானில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை | Srilanka Fuel Crisis In Mannar Petrol Stationஎரிபொருள் விநியோக அட்டை அறிமுகம்

இராணுவம்,கடற்படை ,பொலிஸ்,கிராம அலுவலர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் குறித்த 9 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த வாகன உரிமையாளர்களின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

நானாட்டானில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை | Srilanka Fuel Crisis In Mannar Petrol Stationநானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஏனைய கிராமங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீ ஸ்கந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக அட்டை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலினால் அறிமுகப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here