சிங்கள மக்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.எனினும் தமிழ் மக்கள் வழமையான அடக்குமுறைகளுடன் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில், சப்த கன்னிமார் ஆலயம் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், அதனை படையினர் தடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தினார் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு ஏற்கனவே முன்னைய வருடங்களில், இந்த திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டபோதும், இந்த வருடத்திலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரன் குறிப்பிட்டார்.
கடற்றொழிலுக்கு வடக்கில் பல இலட்சம் எரிபொருள் தேவை. எனினும் அதற்காக எரிபொருட்கள் வழங்கப்படவில்லை என்றும் கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.