மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இரத்த வங்கியில் விசேட இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் 8 ஆம் திகதி (08-05-2022) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாரிய குருதி தட்டுப்பாடு

குறிப்பாக O+ மற்றும் B+ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏனைய வகை குருதியும் தேவைப்படுகின்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை | Urgent Request Director Mannar District Hospitalஎனவே இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here