யாழ்ப்பாணம்- பொன்னாலைப் பிரதேசத்தில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

பொன்னாலை – சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த யசோதரன் யஸ்மிகா எனும் ஒன்றரை வயது பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது உயிரிழப்பு குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை, அருகில் இருந்த 20 லீற்றர் கொள்வனவுடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றை எடுக்க முற்பட்டவேளை, வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.

அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here