முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கொக்குளாய் பகுதியில் வைத்தே சந்தேகநபர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் விசாரணை

குடு எனப்படும் போதைப்பொருளை இவர் வியாபாரம் செய்து வந்துள்ளதுடன் உடமையில் 8 கிராமும் 500 மில்லிக்கிராமமும் உடமையில் வைத்திருந்துள்ளார்.

சிறப்பு அதிரப்படையினரால் கைது செய்யப்பட்ட நபரும் சான்று பொருட்களும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், சான்று பொருட்களையும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here