இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியையடுத்து பல்வேறு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய, வீடுகள் மற்றும் வீதியோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடப்படுவது தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் சில பிரதேசங்களில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் இருந்து எரிபொருள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் தாங்கிகளின் குழாய்களை அறுத்து எரிபொருள் திருடப்பட்டுள்ளது. இதனால் வாகனம் வைத்திருக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here