முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியது.

வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் பொங்கலுக்குரிய ஏற்பாடாக முல்லைத்தீவு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.

இருந்தபோதிலும் இந்த ஆண்டு தீர்த்தம் எடுப்பதற்குச் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.

இதனை அடுத்து அங்கு திரண்ட மக்கள் ஏ – 35 வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டது.

இதன் தொடராக அங்கு ஒன்று திரண்ட கிராமத்து மக்கள் இராணுவக் காலரணின் வேலிகளை அகற்றி அப்புறப்படுத்திவருகின்றனர்.

அந்தப் பகுதியில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் காணப்பட்டமையினால் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here