பொலன்னறுவை – லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த அடையாளந்தெரியாத ஒருவரால் அவர் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின்போது அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் உடனிருந்தனர் என்றும் எனினும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here