எம்பிலிப்பிட்டிய 100 மைல் கல் பகுதியில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் மோதலுக்கு இடையில் ஒருவர், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை கத்தியால் வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர்

 

சம்பவத்தில் கையில் வெட்டுக்காயத்திற்கு உள்ளான இராணுவ வீரர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த தினத்தில் முற்பகல் 92 ஒக்டேன் ரக பெட்ரோலை ஏற்றிய கொள்கலன் வண்டி வந்துள்ளது.

வரிசையில் நின்ற வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மாலை 3 மணியளவில் பெட்ரோல் தீர்ந்து போயுள்ளது.

கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட இராணுவத்தினர்

எரிபொருள் தீர்ந்து போனதால் இராணுவ வீரரின் கையை வெட்டிய நபர் | Fuel Crisis Ambilpitiya Sttastion Army Soldier

இதனையடுத்து எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் திடீரென எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் புகுந்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் புகுந்த கூட்டத்திற்குள் இராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். அப்போது இராணுவ வீரர் ஒருவரின் கையை ஒருவர் வெட்டியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவ வீரர் எம்பிலிப்பிட்டிய கந்துருகஸ்ஹார இராணுவ முகாமில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கூட்டத்திற்குள் இருந்த ஒருவர் தனது கையை வெட்டியதாக இராணுவ வீரர், வைத்தியசாலை பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here