புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் காட்டு துப்பாக்கியினால் மானொன்றை வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக கருவலகஸ்வெவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (02) பிற்பகல் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

மான் இறைச்சி விற்பனை இடம்பெற்று வருவதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற இரகசியத் தகவலுக்கமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது இதற்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போது மானின் கொம்பு மற்றும் மானின் தோல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கருவகஸ்வெவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மானின் உடற்பாகங்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here