கொழும்பு, மாளிகாவத்தையில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் பெரிய கத்தியை வைத்து அச்சுறுத்தும் கொள்ளைக்காரர் ஒருவர் சுதந்திரமாக சுற்றி திரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குறித்த கொள்ளையர் பேக்கரிகள், கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட 04 வர்த்தக நிலையங்களில் காசாளர்களிடம் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார் கொள்ளையர் அட்டகாசம்

 

சில கடைகளில் முழுமையாக முகத்தை மறைக்கும் முகக் கவசம் அணிந்து வரும் இந்த நபர் சில இடங்களில் முகக் கவசம் அல்லது தொப்பி அணிந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மாளிகாவத்தை பகுதியில் உள்ள கடைகளுக்குள் குறித்த கொள்ளையர் நுழைந்து கொள்ளையடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஊழியர் ஒருவர் கடையை விட்டு வெளியே வரும்போது கொள்ளையன் உடனடியாக கடைக்குள் நுழையும் பணம் வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்குள்ள பணத்தை எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது கண்டுகொள்ளாத பொலிஸ்

கொழும்பில் மக்களை அச்சுறுத்தும் மர்ம நபர் - கண்டுகொள்ளாத பொலிஸார் | Who Is The Chief Of Police In Sri Lanka

கொள்ளையடிக்க செல்லும் இடத்தில் ஊழியர்கள் இருந்தால் அவர்களிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.

இறுதியாக கொள்ளையடித்த கடையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் பொலிஸ் நிலையம் ஒன்றும் உள்ள பின்னணியில் குறித்த நபர் சுதந்திரமாக கொள்ளையடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

வீதியில் செல்லும் மக்களிடமும் கொள்ளையடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஹெல்மட் அணிந்திருக்கும் போதிலும் குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பதில்லை என அந்த கொள்ளையனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here