வாழைச்சேனையில் ஹெரோயின் போதைபொருளுடன் நபரொருவர் நேற்று(01) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கதிரவெளி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இரகசிய தகவல்

இதன்போது மக்களடி வீதி, வாழைச்சேனை-4 எனும் முகவரியில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட 38 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைபொருள்

இவரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here