அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருப்போரின் தாகத்தை தனிக்கும் வகையில் இராணுவத்தினரால் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நீர்த் தாங்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதனூடாக மக்களுக்குத் தொடர்ந்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
தற்போது கடுமையான வெய்யில் காலமாக இருப்பதால் வரிசையில் காத்திருப்பவர்கள் தாகத்துடனையே அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரிசையில் காத்திருப்போருக்குக் குடிதண்ணீர் வழங்கும் வகையில் இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நீர்த் தாங்கியை வைத்துள்ளனர்.