தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்.கச்சோிக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த நிலையில் பின்னால் வந்த இருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

 

இச் சம்பவத்தில் தலை மற்றும் கைகளில் சரமாரி வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here