யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைத்தில் இன்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலை பத்து மணியளவில் ஒன்றுகூடிய மக்கள் வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் சில நிமிடங்களில் வீதி தடைகளை அகற்றியதுடன் இருவரை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டதுடன் பின்னர் அச்சுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார் ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்
செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளரும் பொலிஸ் பரிசோதகரால் தனிமைக்கு அழைக்கப்பட்டு கடுமையாக அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் “எதற்க்காக அச்சுறுத்துகிறீர்கள்” என்று பொலிஸ் பரிசோதகரை கேட்டபோது “இந்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களை குழப்புவதாக” தெரிவுத்திருந்த நிலையில் ஊடகவியாளரால் “உங்களிடம் ஆதாரம் இருந்தால் தன்னை கைது செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.”
இந்நிலையில் ஊடகவியலாளர் “பொலிஸாரிடம் தன்னை கைது செய்கிறீர்களா” என கேட்டதற்கு “இல்லை என்றும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டும் அவரை படம் எடுத்த நிலையில் விடுவிக்கப்பட்டார்” என தெரிவிக்கப்படுகின்றது.
54 பொயின்ற்ஸ் பெட்ரோல் இருப்பில் உள்ளது. அவற்றை விநியோகிக்க கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி எரிபொருள் நிரப்பு நிலைய வருகைதந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.