பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்திச் செல்லப்பட்டவர்களில் மீன்பிடி கப்பல் உரிமையாளர் ஒருவரும் மீனவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எவ்வித தகவலும் இல்லை

இவர்களில் ஒருவரது மனைவி கடந்த 20ஆம் திகதி தனது கணவர் வெள்ளை நிற வேனில் ஏறியதாகவும் அதன் பின்னர் எவ்வித தகவலும் இல்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனிடையே, பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தனது மகன் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக காணாமல் போன மற்றையவரின் தாய் தெரிவித்துள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here