மீகஹதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீகஹதென்ன பெலவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இந்த குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றிரவு பெலவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் குடிபோதையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நிக்கவெரட்டிய, மாகல்லேகம பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.