முல்லைத்தீவு – மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி துணுக்காய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என்று பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று அதிகாலை முதல் 2 கிலோ மீற்றர்களுக்கு அதிகமான நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
குறித்த செய்தியினை சக ஊடகவியலாளருடன் அறிக்கையிட சென்ற சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த நபரொருவரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதன்போது அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும்பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரை எச்சரித்ததுடன், ஊடகவியலாளரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.