இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாகவும் சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, குழந்தைகள் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறுவர்களைக் கொண்டு தகுந்த சிகிச்சைகளை பெறுமாறும் அந்த சங்கம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுங்கள்! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களை அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்ல பெற்றோர்கள் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுங்கள்! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்களுக்கு சிறந்த சத்தான உணவுகளை வழங்க வேண்டும் எனவும், அத்துடன், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் எனவும் நோய் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here