மன்னார்  நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் (வியாழக்கிழமை) மண்ணெண்ணெய்    விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணையை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 300 ரூபாய்க்கான மண்ணெண்ணெய்  வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும்  மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாளரால் அப்பகுதியில் கடமையாற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன் பொலிஸாரும்,இராணுவத்தினரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் மன்னாரில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்  பெற்று வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here