திருகோணமலை – குச்சவெளி பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகரபுரம் பகுதியில் நேற்று (12) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கரைவலை இழுக்கும் போது இரு குழுக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது சாகரபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரும் ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளதோடு, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.