கொழும்பு – புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகே நேற்று முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றொரு முன்னாள் இராணுவ வீரர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கட்டுப்பாட்டில் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் சிறப்புக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

மோட்டார்சைக்கிளொன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here