உடலங்கள் மீட்பு
தெற்கு களுத்துறை தெற்கு ஹினடியங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 69 வயதுடைய தந்தை மற்றும் 33 வயதுடைய மகள் ஆகிய இருவரின் சடலங்கள் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன.
தந்தை வீட்டில் நாற்காலியில் அமர்ந்தவாறு சடலமாக காணப்பட்டதாகவும், மகள் அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள், களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் தொடர்கின்றன
இந்த இறப்புக்கள் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொலை மற்றும் சந்தேகத்துக்குரிய மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.