வவுனியா – கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தேடுதல் நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு

இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியின் வீட்டிற்கு அண்மித்த பாதையில் அவரது காலணி மற்றும் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சடலம் மீட்பு

இதன்போது அப்பகுதியில் இருந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here