புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர், கெலேதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த விராஜ் லியனகே எனப்படும் 30 வயதுடைய திருமணமாகாத இளைஞர் என தெரியவந்துள்ளது.
ஆடம்பர ஹோட்டலில் வேலை
மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இளையவரான விராஜ், கொமாண்டோ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்று கொழும்பில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
உணவகத்தில் சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக விராஜ் உணவக ஊழியர்கள் மற்றும் குழுவிற்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பழி தீர்த்த மர்ம கும்பல்
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த விராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.