கொழும்பு பச்சிகாவத்தை மாலிக்காவத்தை பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு எரிபொருளை பெற்று தருமாறு கோரி மக்கள் இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,
மக்களின் ஆதங்கம்
எங்கள் குழந்தைகள் பசியுடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு வழங்குவதற்கு எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் எப்படி வாழ்வது.
குழந்தைகளுக்கு சமைப்பதற்காக எங்கள் வீடுகளில் எரிவாயுயோ, மண்ணெண்ணெயே இல்லை. நாங்கள் எந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்றாலும் எங்களது அடையாள அட்டையை பார்த்து விட்டு இங்கு உங்கள் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என எங்களை திருப்பி அனுப்புகிறார்கள்.
நாங்கள் எங்கு சென்று மண்ணெண்ணெய் வாங்குவது என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது மழை பெய்வதையும் பொருட்படுத்தாது மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இப் போராட்ட களத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.