இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா IOC நிறுவனமும் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் அதிகாலை முதல் மீண்டும் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டர் 83 ரூபாவினாலும் 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் 77 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு லீட்டர் ஆட்டோ டீசல் 111 ரூபாவாலும், பிரிமியம் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 116 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 19ம் திகதியின் பின்னர் மீளவும் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here