அரசாங்க சேவைகள் இன்றைய தினம் வழமைக்கு திரும்பும் என அரசாங்க சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியிருப்பதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட ஏனைய சேவைகள் இன்று முதல் வழமைக்குத் திரும்பும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும், பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள பதிவாளர் திணைக்களத்தின் பணிகளும் இன்றைய தினம் வழமைக்குத் திரும்பும் என அதன் பணிப்பாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க சேவைகள் இன்று வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

அரசாங்க சேவைகள் இன்று வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here