95 ரக ஒக்டோன் பெட்ரோல் இன்று முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுவிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களில் இருந்து 95 ரக ஒக்டோன் பெட்ரோல் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அவை எதிர்வரும் 6 வாரங்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே நாளை முதல் 95 ரக ஒக்டோன் பெட்ரோலை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.