அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் இந்த நீதிமன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில், அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பின் அழைப்பாளர், அதன் உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் இன்று அவர்கள் வழிநடத்தும் பேரணி, கோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள எந்தவொரு அரச நிறுவனத்தில், உத்தியோகபூர்வ இல்லத்தில் நுழைதல், சேதப்படுத்தல் அந்த பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தல், வன்முறை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here