முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்கள வாகனங்களுக்கு மற்றும் பரீட்சை நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களுக்காக தலா 6600 லீற்றர் பெட்ரோல் கிடைத்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தின் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கு அமைவாக இவ்வாறு பெட்ரோல் நேற்று கிடைத்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பௌசர்கள் வந்துள்ளதை அறிந்த மக்கள் பெட்ரோலுக்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் கூடியுள்ள நிலையில், அங்கு அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது.முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு தொடக்கம் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரபரீட்சை நடைபெறவுள்ள நிலையில், பரீட்சைகள் நடவடிக்கை மற்றும் அரச வாகனங்களின் அத்தியாவசிய தேவைக்காக எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பெட்ரோல் தாங்கியிலிருந்து பெட்ரோலினை இறக்கியவுடன் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சூழ்ந்து கொண்டுள்ளார்கள். இதனால் யாருக்கு எரிபொருள் வழங்குவது என்பது தொடர்பில் குழப்ப நிலையென்று ஏற்பட்டுள்ளது.

அங்கு கூடி நின்ற இளைஞர்கள் வீதியினை மறிக்க முற்பட்ட வேளை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் பிரசன்னமாகி நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காகப் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் மற்றும் எரிபொருள் வழங்குநர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளார்கள்.

எந்த வாகனமாக இருந்தாலும் 500 ரூபாவிற்கு பெட்ரோலினை வழங்கத் தீர்மானித்து இரவிலிருந்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் பெட்ரோல் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டமையால் பலர் குழப்பமடைந்த நிலையில் திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் சிலர் பெட்ரோலினை வழங்க வேண்டும் என வலியுறுத்திவந்துள்ள நிலையில், இன்று காலை மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் வீதியினை மறித்து போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

மக்கள் தங்களின் அன்றாட தேவை பயன்பாட்டிற்காக எரிபொருளை வழங்கவேண்டும் என கோரியுள்ளதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க பொலிஸாரின் தலையீட்டினை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் வந்து நிற்பவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை (Photos)

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை (Photos)

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை (Photos)முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை (Photos)

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here