மட்டக்களப்பு – சந்திவெளி பகுதயில் சந்தணமடு ஆற்றுப்பகுதியில் நேற்று யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவடிவேம்பு – வில்லுக்கொலனி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வைத்தியராசா கோவிந்தராசா (வயது 37) என்பவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

தனது செங்கல் உற்பத்தி செய்யும் இடத்துக்குச் சென்று அங்கு வேலை செய்து விட்டு, இரவாகியமையால் தான் தங்கிருக்கும் குடிசைக்குச் சென்று கொண்டிருக்கும் போதே காட்டுக்குள் இருந்த யானை இவரைத் தாக்கியுள்ளது.

படுகாயமடைந்த குறித்த நபர் செங்கலடி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சந்திவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here