பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளபோதிலும் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு உரிய ஊழியர்கள் முன்னர் நியமிக்கப்பட்ட கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

பரீட்சை மண்டபங்களாகப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களும் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்குமாறும் பரீட்சை மண்டபங்களைத் தயாரிக்கும் கடமைகளுக்கு உதவுமாறும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். கேட்டுக்கொண்டுள்ளார்.

பரீட்சை நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நோக்குநர்களாக பெயரிடப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் மேற்பார்வையாளர்களின் அழைப்புக்கு அமைய, உரிய பணிக்கு சமுகமளித்தல் வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டுக்கான ஜூம் தொழிநுட்பம் தொடர்பான கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டத்தை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு ஏதேனும் அவசரத் தேவை இருப்பின் திங்கட்கிழமை பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here