முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்கள் வருடம்தோறும் மே மாதம் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படுகின்றனர்.

இதனடிப்படையில் சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் இவ்வருடம் நினைவேந்தல் நிகழ்வானது முன்னாள் போராளி கண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் லோறன்ஸ் பொதுச் சுடரினை ஏற்றி வைக்க ஏனையவர்களும் சுடர்களை ஏற்றி நினைவு படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்துள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

பிரபலமான செய்தி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here