முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது இன்று திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

இனஅழிப்பு வாரத்தினையொட்டி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது நேற்று மாலை திருகோணமலையினை சென்றடைந்திருந்தது.

திருகோணமலை விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நீதிகோரிய பேரணியானது முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இன்றைய தமிழர்களின் நீதிகோரிய பேரணிக்குத் திருகோணமலையைச் சேர்ந்த சிங்கள மக்களும் ஆதரவு வழங்கியதைக் காணமுடிந்தது.

முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமாகியுள்ள பேரணிக்குத் திருகோணமலையில் பல்லின மக்களும் ஆதரவு வழங்கி வருவதுடன், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு துன்பத்தினை நினைவுகூரும் வகையில் கஞ்சிகளையும் வழங்கி வருகின்றனர்.

இன்றைய பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் தண்டாயுதபாணி உட்படப் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி கொண்டிருக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நகரும் நடை பேரணி (Photos)

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நகரும் நடை பேரணி (Photos)

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here