காலிமுகத்திடல் போராட்ட பூமியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் மாத்திரமே கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜேவிபி சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன் குற்றமிழைத்தவர்களை கைது செய்யுமாறு கோரி , நேற்று சோசஸிஷ இளைஞர் முன்னணி பொலிஸ் தலைமையகம் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது.

இதனையடுத்து பொலிஸ் அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்த சட்டமா அதிபர், சாட்சியங்கள் இருந்தால், காலி முகத்திடல் வன்முறை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட்ட 22 பேரையும் கைதுசெய்யுமாறு தெரிவித்திருந்தார் இந்தநிலையிலேயே  மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடல் வன்முறை! அழுத்தங்கள் காரணமாக மேலும் இருவர் கைதுகாலிமுகத்திடல் வன்முறை! அழுத்தங்கள் காரணமாக மேலும் இருவர் கைது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here