தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக பொய் வதந்திகளை பரப்பி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் இல்லத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவின் நாளிதழான தி ஹிந்து நாளிதழில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த போவதாக வெளியிட்ட செய்தியானது தமிழ் மக்களிடையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான செயற்பாட்டினால் நாட்டில் தமிழ் மக்கள் உட்பட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பெரும் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அயல் நாடான இந்தியா சிங்கள அரசுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது தமிழீழப் போராட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆயுதபலம் மற்றும் ராணுவ பலத்தை வழங்கி எமது இனத்தை முற்றுமுழுதாக அளித்த செயற்பாட்டுள்ளார்கள்.

அது மட்டுமல்லாது தற்போது தமிழ் ஈழத்திற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாமல் பெரும் கஷ்டத்தில் இருக்கின்றனர்.

இவ்வேளையில் இவ்வாறானதொரு தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுதுறை அறிக்கையொன்று வெளியிட்டுள்ளதாக குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனால் நாம் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் இவ்வாறு உண்மைக்கு புறம்பான இந்த செய்தியினை முன்னாள் போராளிகள் என்ற வகையில் தாம் வன்மையாக கண்டிப்பதாக” தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here