மட்டக்களப்பில் வழமைபோல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் (18/05/2022) திகதி புதன் கிழமை மு.ப. 9.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதி ஶ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெறும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“முள்ளிவாய்க்காலில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உடன் பிறப்புக்களை நினைவு கூர்வது எமது உரிமை.

கடந்த 2019ஆம் ஆண்டு முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவு நாளை பல அச்சுறுத்தல் மத்தியில் இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும், மட்டக்களப்புமாமாங்கேஸ்வரர்ஆலயத்திலும் நடத்தினோம்.

2010 தொடக்கம் தொடர்ந்து மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலம் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது” எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here