கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் நபரொருவர் கத்தியால் குத்தி கொலைகொழும்பில் நபரொருவர் கத்தியால் குத்தி கொலை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here