நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் சில தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த சுற்றறிக்கைகளை ரத்து செய்யுமாறு இறக்குமதியாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை கட்டண அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையுவுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீட்க முடியாதுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்தியவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான துரித அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் வஜிர அபேவர்தன இதன்போது உறுதியளித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here