எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா அறிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையங்களுக்கு நேற்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

விசாக பூரணை தினம், விடுமுறை தினம் என்பதால் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்றைய தினம் எரிபொருள் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும்.

மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் கிடைக்கப் பெறும்.

ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று முதல் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் விநியோகம்

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here