மன்னார் – சாந்திபுரம் பெளத்த விகாரை சிரமதான பணி இன்று காலை அப்பகுதி இளைஞர்களால் முன்னெடுக்கபட்டுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் ‘சமூக ஒத்திசைவை பலப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் இந்த சிரமதானப்பணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரையை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

பௌத்த மக்களால் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் ரெஜினா ராமலிங்கம் தலைமையில் லியோ மற்றும் இளைஞர் கழகங்கள், தன்னார்வ இளைஞர்கள் இணைந்து குறித்த சிரமதான பணியை முன்னெடுத்திருந்தனர்.

சிரமதான பணியில் சர்வமத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை செயற்பாட்டு ரீதியாக வெளிப்படுத்தியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரையை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரையை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரையை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here