முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனி இன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் இன்று பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையில் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் பொத்துவில் பிரதேசசபைக்கு முன்பாக குறித்த பேரணி ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

12ஆம் திகதி தொடங்கிய முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுவதுடன், நிறைவுபெறவுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்கு நீதியைச் சர்வதேச சமூகம் பெற்றுக்கொடுக்க வலியுறுத்தியும், இந்த படுகொலைகள் தொடர்பில் எதிர்கால தமிழ்ச் சமூகம் அறிந்துகொள்ளும் வகையிலும் வருடாந்தம் இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இன்று காலை ஆரம்பமான இந்த பேரணியானது திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக கல்லடி பாலம் வரையில் வரவுள்ளது. நாளையதினம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணம் அமையும்.

17ஆம் திகதி திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினை சென்றடைந்து 18ஆம் திகதி முல்லைதீவிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு உயிர்நீத்த, படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டு நினைவேந்தல் வாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் நடைபவனி ஆரம்பம்

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் நடைபவனி ஆரம்பம்

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here