முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டமானது தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டி போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.